Product Description
கைகளால் போர்ட்ரைட் வரைபவர்கள்னு பார்த்தால் ஒரு இருபத்தைந்து முப்பது பேர்கூட உயிரோடு இல்லை. இப்பொழுது வரைபவர்கள் மிகவும் குறைவு. இந்த மனுஷன் 50 வயசு, 60 வயசு தாண்டி இன்னும் படம் வரைந்துகொண்டு இருக்கிறார். நான் எங்கேயோ உட்கார்ந்து கொண்டு இருக்கிறேன். அவரைக்கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறேன்.
ஓவியத்தை விட அவருடைய எழுத்துகளில் வீரியம் அதிகமாக இருக்கிறது. எழுத்தை அவர் நிறைய டெவலப் பண்ணிக்கொண்டே இருக்கிறார். இப்படி எழுத்து மீதான ஆர்வமுள்ள ஓவியங்கள் மீதான ஆர்வமுள்ள ஒரு தம்பி இருக்கான். அவனைப் பாராட்டுவதை விட எனக்கு என்ன பெருமை இருக்கிறது?
— சிவகுமார்
ஓவியரும் திரைக்கலைஞரும்